“விஜய் ஆண்டனி”-க்கு ஜோடியாக பிரான்ஸ் நடிகையா?

காக்கி படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக பிரான்ஸ் நடிகை நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தை முடித்துவிட்ட, விஜய் ஆண்டனி, அடுத்து அக்னிச் சிறகுகள் மற்றும் காக்கி படங்களில் நடித்துவருகிறார்.

அக்னிச் சிறகுகள் படத்தை நவீன் இயக்கி வருகிறார். இதில் அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், ரைமா சென் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது. அடுத்தும் வெளிநாடு செல்ல இருக்கின்றனர்.

காக்கி படத்தை ‘வாய்மை’ செந்தில்குமார் தனது ஓபன் தியேட்டர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார். இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் ஶ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பானது. அதில், ‘யூனிபார்ம் போடலைன்னாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே ‘காக்கி’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வந்தது. அக்னிச் சிறகுகள் படத்துக்காக படக்குழு ரஷ்யா சென்றதால், காக்கி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது சென்னையில் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் பிரான்ஸ் நடிகை. அங்கு சில படங்களில் நடித்துள்ள அவர் யார் என்பதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.

Advertisements

fogpriya

Next Post

வருடத்துக்கு '26 மில்லியன் டாலர்' சம்பாதிக்கும்.. யூ ட்யூப் சேனல் நடத்தும் 8 வயது சிறுவன் "ரியான் காஜி"

Fri Dec 20 , 2019
எட்டு வயதான சிறுவன் ரியான் காஜி யூட்யூப் சேனலில் 2019ஆம் ஆண்டின்படி அதிகம் சம்பளம் வாங்கும் படைப்பாளராக இருக்கிறார் என்று ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்பஸ் படி  ரியான் காஜி (எ) ரியான் குவான்  யூ ட்யூப்பில் வீடியோவில் அதிக வருமானமான 22 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.  ரியானின் பெற்றோரால் 2015இல் தொடங்கப்பட்டது ரியான் வேர்ல்ட் என்ற யூ ட்யூப்  சேனல். இந்த சேனல் தற்போது 22.9 […]
%d bloggers like this: