“ஆயிரம் ஜென்மங்கள்” – திகில் ட்ரெய்லர் ரிலீஸ்..!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தின் திகில் ட்ரெய்லர் வெளியானது.

காலம்காலமாக காமெடி, காதல் படங்கள் எடுத்து வந்த இயக்குனர் எழில் முதன்முறையாக பேய் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ’எக்கடிக்கி போதாவு சின்னவாடா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் உருவாகியுள்ளது. டார்லிங் என்ற பேய் படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல காமெடி, காதல் படங்களை நடித்து வந்தார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷின் சில படங்கள் சரியாக போகாத நிலையில் மீண்டும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மூலம் ஹிட் கொடுக்க உத்தேசித்திருப்பதாக தெரிகிறது.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிகிஷா படேல், ஈஷா ரெப்பா முதலியோர் நடித்துள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்ட காமெடி பிரபலங்கள் நடித்திருந்தாலும் படத்தின் ட்ரெய்லர் முழுவதும் சீரியஸான கதை போலவே காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே 100% காதல் என்ற தெலுங்கு ரீமேக்கில் நடித்து அது சரியான அளவில் வசூலிக்காத நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு இந்த தெலுங்கு பேய்பட ரீமேக் கை கொடுக்குமா என்பது படம் வெளியாகும்போது தெரிய வரும்.

Advertisements

fogpriya

Next Post

மாஸ் காட்டும் "ஹீரோ" ட்ரெய்லர்..!

Sat Dec 14 , 2019
ஹாலிவுட் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் இந்தியாவில் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழிலும் சூப்பர்ஹீரோ படங்கள் தயாரிக்க ஈடுபாடு அதிகமாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக சூப்பர்ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கே ‘ஹீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. சிறு வயதிலிருந்தே சக்திமான் நாடகத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படும் […]

Actress HD Images

Advertisements