‘வால்டர்’ படம் டீஸரை ரிலீஸ் செய்த பிரபல இயக்குனர்..!

சிபி சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் வால்டர் திரைப்படத்தின் டீஸரை நேற்று மாலை பிரபல இயக்குனர் வெளியிடுகிறார். யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் ‘வால்டர்’. சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையாகும். இப்படத்தை 11:11 ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ஷ்ருதி திலக் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நட்டி நடராஜன் மற்றும் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஷிரின் கன்ச்வாலா, சனம் ஷெட்டி, பாவா செல்லதுரை, அபிஷேக் வினோத் மற்றும் சார்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இபடத்துக்கு ராசமதி ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். மேலும், விக்கி இப்படத்தின் சண்டைக் காட்சிகளை இயக்க, தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இம்மாதம் 10-ஆம் தேதி இயக்குனர் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டார். இந்நிலையில், இப்படத்தின் டீஸரை நேற்று மாலை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிடுகிறார்.

Advertisements

Next Post

பொங்கல் ரிலீஸ் தர்பாருடன் மோதும் இரண்டு படங்கள்..!

Tue Dec 31 , 2019
பொங்கலுக்கு ரஜினியின் தர்பார், தனுஷின் பட்டாஸ் மற்றும் சிவாவின் சுமோ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் […]

Actress HD Images

%d bloggers like this: