“காத்தெல்லாம் பூ மணக்க” இசை அரக்கன் சந்தோஷ் நாராயணனின் “ஜிப்ஸி” பட பாடல் ரிலீஸ்.!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். குதிரை, கிட்டார் இசைக்கருவியுடன் நாடு முழுவதும் சுற்றும் இளைஞன். அவனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதல் என இயக்குனர் அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் “காத்தெல்லாம் பூ மணக்க” என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ…

Advertisements

Next Post

நடிகை ஜோதிகா-வின் "பொன்மகள் வந்தாள்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

Tue Mar 3 , 2020
தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , சூர்யா , அஜித் , விக்ரம் என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 2000ம் காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.அதனை அடுத்து சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட […]
%d bloggers like this: