இந்திய சினிமாவில் முதல் முறையாக ஹீரோவாகும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் இதுவரை கிரிக்கெட் வீரர்கள் சின்ன சின்ன கேரக்டர்கள் மட்டுமே நடித்து இருந்த நிலையில் முதல் முறையாக கிரிக்கெட் வீரர் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ஒன்று தமிழில் உருவாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய கிர்க்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவருமான ஹர்பஜன்சிங் ஏற்கனவே சந்தானம் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

’பிரண்ட்ஷிப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஜே.பி.ஆர்.பி. ஸ்டாலின் என்பவர் தயாரிக்க உள்ளார். இந்த படம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே தமிழில் டுவிட்டுக்களை பதிவு செய்து தமிழக மக்களின் மனதில் குடியேறிய ஹர்பஜன்சிங் தற்போது ஹீரோவாகவும் தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisements

Next Post

பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலின் புதிய கெட்டப், மிரட்டலான... "சிண்டர்ல" பஸ்ட் லுக் போஸ்டர்...

Mon Feb 3 , 2020
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் சீசன் 3 முடிந்து வெளிவந்ததும் பல படங்கங்களில் காமிட்டானார். இந்நிலையில் தற்போது முன்னணி நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள சிண்டர்ல படத்தில் சாக்ஷி நடித்துள்ள மிரட்டலான புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. Advertisements
%d bloggers like this: