ஐந்து குழந்தைகளுடன் ஹரிஷ் கல்யாண்…”தாராள பிரபு” பர்ஸ்ட் லுக் ரிலீஸ்…

தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் 5 குழந்தைகளுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி வகையை சேர்ந்த இந்த படம், விந்து தானம் மற்றும் குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 

பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்தது மட்டும் அல்லாமல் 3 தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்குக்கு போட்டி நிலவியது. இறுதியாக ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

இயக்குனர்கள் கிரிஷ், விஜய் ஆகியோரிடம் இணை இயக்குனராக இருந்த கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அனிருத் வெளியிட்டுள்ளார். இதில் தாமரை மலரில் நின்று 5 குழந்தைகளுடன் காட்சியளிக்கும் ஹரிஷ் கல்யாண் குழந்தைகளை தானமாக வழங்குவது போல் அமைந்துள்ளது.

Advertisements

Next Post

இந்தி-க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - கங்கனா ரணாவத் அறிவுரை...

Sun Jan 12 , 2020
தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான கங்கனா ரணாவத், இந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இந்தி திவஸ் (இந்தி தினம்) தினத்துக்காக கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இந்தி நம் தேசிய மொழி. ஆனால் அதை பேச நாடு மிகவும் யோசிக்கிறது. நம்பிக்கையுடன் ஏபிசிடி சொல்கிறார்கள். ஆனால் அதையே இந்தியில் சொல்ல நம்பிக்கை வருவதில்லை.  தங்கள் பிள்ளைகள் அற்புதமாக […]
%d bloggers like this: