“ஹீரோ” சினிமா விமர்சனம்..!

நடிகர்கள் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், ரோபோ ஷங்கர்இசை யுவன் ஷங்கர் ராஜாஇயக்கம் பி.எஸ். மித்ரன்தமிழில் நேரடியாக எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மிகக் குறைவு. படத்தின் தலைப்பும் போஸ்டர்களும் அம்மாதிரியான ஒரு எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம் மீது உருவாக்கியிருந்தன. ‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது.

90களின் இறுதியில் சக்திமான் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து வளரும் சக்திக்கு (சிவகார்த்திகேயன்), தானும் அதுபோல ஒரு சூப்பர் ஹீரோ ஆக வேண்டுமென ஆசை. ஆனால், தந்தையின் மருத்துவச் செலவுக்காக தன்னுடைய மதிப்பெண் பட்டியலையே விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்குப் பிறகு, போலி சான்றிதழ்களை தயாரிப்பது, தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்து, கமிஷன் பெறுவது என இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த புத்திசாலி மாணவியான மதிக்கு (இவானா) ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித்தர முயல்கிறான் சக்தி. ஆனால், மதியின் கண்டுபிடிப்பைத் திருடிக்கொண்டு, அவருக்கு இடம் இல்லை என்கிறார்கள். இதனால், மதி தற்கொலை செய்துகொள்கிறார். மதி போன்ற பல புத்திசாலி மாணவர்களைப் பராமரித்துவரும் சத்யமூர்த்தியைச் (அர்ஜுன்) சந்திக்கிறார் சக்தி. மூர்த்தி ஏன் வெளியுலகின் பார்வையிலிருந்து ஒதுங்கி வாழ்கிறார், வில்லன்களின் நோக்கம் என்ன, அவர்களை சக்தி என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக் கதை.

Advertisements

fogpriya

Next Post

கார்த்தி-யின் 'தம்பி' படத்தை ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்..!

Sat Dec 21 , 2019
கார்த்தி நடித்துள்ள தம்பி படத்தை, தமிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படம், தம்பி. சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர், மோகன்லால், மீனா நடித்து சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். இதை தமிழில், கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். இதையடுத்து தமிழில் அவர் […]
%d bloggers like this: