ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘நான் சிரித்தால்’ ட்ரைலர் வைரல் .!

ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் நான் சிரித்தால் ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிறது. அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்  ‘நான் சிரித்தால்’. இப்படத்தை மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய இரு படங்களையும் தயாரித்த, இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி இப்படத்தையும் தயாரிக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிகுமார், படவா கோபி, ஷா ரா, எருமை சாணி விஜய், முனிஷ்காந்த், ரவி மரியா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ட்ராக் ‘Break Up’ பாடல் மற்றும் ‘தோம் தோம்’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. சோகம், ஸ்ட்ரெஸ், பயம், வலி வந்தால் உடனே தன்னை அறியாமல் சிரித்துவிடும் நர்வஸ் லாஃப்டர் எனும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்படுள்ள மனிதன் தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக காட்டும் இந்த புதுமையான படத்தின் ட்ரைலர் தற்போது வைரலாகிவருகிறது. அதில் அஜித் மற்றும் விஜய் படங்களில் சோகமான சீனில் சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது மேலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Advertisements

Next Post

அவனே ஸ்ரீமன் நாராயணா- திரைவிமர்சனம்..!!

Tue Jan 7 , 2020
ஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் என்பவர்களுக்கு பச்சை விளக்கு காட்டுகிறது அவனே ஸ்ரீமன் நாராயணா. ராமாயண நாடகம் போடுபவர்கள் கொள்ளையடித்து புதைத்து வைத்த செல்வத்தை கொள்ளையடிப்பது யார் என்ற போட்டி தான் படத்தின் கதை. கூடவே அண்ணன் தம்பிகளான இரு வில்லன்களுக்கு இருக்கும் பிரச்சனையும் இவற்றை ஹீரோ எப்படி ஸ்மார்ட்டாக கேண்டில் செய்கிறார் என்பதும் ராமராமா எனும் வில்லனுக்கு பெயர் வைத்து குசும்பு செய்தாலும் படம் நெடுக இந்துத்துவ […]

Actress HD Images

%d bloggers like this: