திருமண முறிவு பற்றி விருது மேடையில் உருக்கமாகப் பேசிய டிடி..!

விருது விழாவில் தனது திருமண முறிவு பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார் நடிகையும், சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டிடி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கலாட்டா நட்சத்திரா விருது வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளினி என்ற விருது பெற்றார் டிடி. அப்போது மேடையில் பேசிய டிடி, பெண்களுக்கு ஊக்கம் தரும் வகையில் தான் கடந்து வந்த கசப்பான வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார். அதில், “எனக்கு இப்போது 34 வயதாகிறது. நான் வாழ்க்கையில் என் குடும்பத்திற்கு தேவையான எல்லாக் கடமைகளையும் செய்து முடித்து விட்டேன். அதனால் என் வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். அதுவே கூட என் அழகின், இளமையான தோற்றத்தின் ரகசியமாக இருக்கலாம்.

இன்றைய இளம் பெண்களுக்கு நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு மந்திரத்தை மட்டும் நாம் பின்பற்ற வேண்டும். அது உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், யார் உங்களைப் பற்றி என்னக் கூறினாலும் அதனைப் பற்றி கவலைப்படக் கூடாது.

என் வாழ்க்கையிலும் நான் எப்படியான கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன் என உங்கள் அனைவருக்குமே தெரியும். நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம். நம்முடைய கேரக்டரைப் பற்றி தவறாகப் பேசலாம். ஆனாலும் நாம் வழக்கம்போல காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு வேலைக்கு கிளம்பினால், உங்கள் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது” என டிடி பேசியுள்ளார்.

சமீபத்தில் டிடியின் முன்னாள் கணவர் அளித்த பேட்டியொன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், அவர் டிடியின் நடவடிக்கைகள் குறித்து மோசமாக விமர்சித்திருந்தார். தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் டிடி இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

நடிகை "சோனாக்ஷி சின்ஹா"வின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Sun Dec 22 , 2019
சோனாக்ஷி சின்ஹாவின் புதிய போட்டோஷூட் அனலைக் கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாஒரு போட்டோஷுட் நடத்தினார் அதில் விதவிதமாக […]
%d bloggers like this: