தீபிகா படுகோன் நடிக்கும் “மகாபாரதத்தில்” இந்த ஹீரோ தான் கிருஷ்ணராக ஒப்பந்தம்…

தீபிகா படுகோன் திரவுபதியாக நடிக்கும் மகாபாரதம் படத்தில் ஹிர்த்திக் ரோஷன் கிருஷ்ணராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரமாண்ட பட்ஜெட்டில், மகாபாரதம் சினிமாவாகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதற்காக அந்தந்த மொழி நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இந்த மெகா படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இவர் டங்கல் உட்பட சில படங்களை இயக்கியவர். தமிழில் அம்மா கணக்கு படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரின் கணவர்.

இந்தப் படத்தில் திரவுபதி வேடத்தில் தீபிகா படுகோன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு விட்டது. ராம் லீலா, பாஜிரோ மஸ்தானி உள்ளிட்ட பல படங்களில் கவனிக்கத்தக்க கேரக்டர்களில் நடித்துள்ள தீபிகா, இப்போது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் சப்பாக் இந்தி படத்தில் திராவக வீச்சில் முகம் சிதைந்த பெண்ணாக நடித்துள்ளார்.

தற்போது மகாபாரத கதையின் முக்கிய கேரக்டரான திரவுபதி வேடத்தை ஏற்க உள்ளார். இதில் நடிப்பது குறித்து தீபிகா கூறும்போது, மகாபாரதத்தில் நிறைய வாழ்வியல் கதைகள் உள்ளன. அதில் திரவுபதி வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருக்கிறது. இது எனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய கேரக்டராக இருக்கும்’ என்று கூறியிருந்தார். இந்தப் படத்தை மது மந்தனாவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார் தீபிகா.

இந்தப் படத்தில், கிருஷ்ணராக நடிக்க ஹிர்திக் ரோஷனிடம் பேசியுள்ளனர். அவர் ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது. அவர் ஓகே சொன்னால் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும். இந்தப் படம் அடுத்த வருடம் தொடங்குகிறது. 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisements

Next Post

"சில்லுக்கருப்பட்டி" - திரைவிமர்சனம் ..!!

Fri Dec 27 , 2019
ஒரே படத்தில் நான்கு விதமான கதைகள், ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு நடிகர்கள், நடிகைகள். அவர்களுக்குள் வெளிப்படும் காதல் உணர்வுதான் இந்த ‘சில்லுக்கருப்பட்டி’. பதின்ம வயதில் இருக்கும் குப்பை பொறுக்கும் ஒரு ஏழை சிறுவன். அவனுக்குக் கிடைக்கும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியின் மோதிரத்தைத் திருப்பித் தர நினைக்கிறான். அதை அவன் எப்படி திருப்பிக் கொடுத்தான், அதற்கு பதிலுக்கு அந்த சிறுமி என்ன செய்தாள் என்பதுதான் ‘பின்க் பேக்’. ‘மாஞ்சா’ என்றற குப்பை […]

Actress HD Images

%d bloggers like this: