நான் பீர் அடிப்பேன்… அது என்னுடைய இஷ்டம்… அதிர வைத்த மலையாள நடிகை..!!

தனக்கு பீர் அடிக்கப் பிடிக்கும் என்றும், அது தன்னுடைய இஷ்டம் என்றும் மலையாள நடிகை வீணா நந்தகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்து பலரையும் அதிர வைத்துள்ளார்.ஆசிப் அலி ஹீரோவாக நடித்த கெட்டியோளானு என்டே மாலாகா படத்தில் ரின்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வீணா நந்தகுமார். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பீர் குடிக்கும் பழக்கம் உள்ளது என்று தெரிவித்து அதிர வைத்துள்ளார். மது அருந்தும் பழக்கமே இருந்தாலும் அதை நடிகைகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இந்நிலையில் தான் வீணா உண்மையை போட்டுடைத்துள்ளார். எனக்கு குடிப்பழக்கம் இருப்பதை தெரிவிக்க நான் ஏன் பயப்பட்ட வேண்டும்? அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?. பீர் அடித்து போதை ஏறிவிட்டால் நான் நிறைய பேசுவேன். இதை நான் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூட தெரிவித்துள்ளேன். தற்போதுள்ள இளைஞர்களில் பலருக்கும் பீர் குடிக்கும் பழக்கம் உள்ளது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் வீணா.பீர் பற்றி பேச நான் எப்பொழுதும் வெட்கப்பட்டதே இல்லை. இந்த பழக்கத்தால் கேடு எதுவும் இல்லை. இது அவரவர் விருப்பம். நான் பீர் குடிப்பது குறித்து அறிந்து என்னை கலாய்க்கிறார்கள். முதலில் அவர்கள் தாங்கள் செய்வது சரியா, தவறா என்பதை பார்க்க வேண்டும் என்று வீணா கூறியுள்ளார். ஓ, சேச்சி பெக் அடித்து மட்டையாகிவிடுவாரோ என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்ததை வீணாவும் பார்த்திருக்கிறார்.

வீணா அளவுக்கு எந்த நடிகையும் இப்படி பேட்டி கொடுக்கும்போது எல்லாம் பீர் குடிப்பது பற்றி பேசுவது இல்லை. இந்நிலையில் தான் வீணாவை சமூகவலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். நல்ல பெண் யாராவது இப்படி தண்ணி அடிப்பதை பெருமையாக பேசுவாரா என்று சேட்டன்கள் கேட்டுள்ளனர். வீணா தெரிவித்தது போன்று பீர் அடிப்பது அவர் இஷ்டம், அதை குறை சொல்ல சேட்டன்களுக்கு மட்டும் அல்ல யாருக்கும் உரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisements

Next Post

சூர்ப்பனகையாக மாறிய சிவகார்த்திகேயன் பட நடிகை "ரெஜினா கெஸண்ட்ரா" பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!!

Wed Mar 4 , 2020
நடிகை ரெஜினா கெஸண்ட்ராவின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. ரெஜினா கெஸண்ட்ரா நடிக்கும் புதிய படத்தின் பெயர் சூர்ப்பனகை. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் ராஜூ இயக்கும் இந்த படத்தில் ரெஜினா வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை காணுங்கள். ரெஜினாவுடன் இந்த படத்தில் அக்ஷரா கவுடா, சதீஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். […]
%d bloggers like this: