ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் – மனம் திறந்த நித்யா மேனன்..!

கோலிவுட்டில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு  படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’யிலும் நடிக்கிறார்.
 மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது, தான் எதிர்பாராத விதமாக தான் சினிமா துறையில் நுழைந்தேன் எனவும் ஓரிரு ஆண்டுகள் நல்ல படங்களில் நடித்துவிட்டு போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து நடித்து வந்ததால் அதன் மீது விருப்பம் அதிகமாகிவிட்டது.   மேலும் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக குறைவே. என்னிடம் சிலர் மிகவும் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.  பின்னர் பெண்களிடம் கவுரவமாக நடந்துகொள்ளுங்கள் என நன் கூறினேன்.  நமக்கு எப்பேற்பட்ட கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் கூட பயப்படாமல்  தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். அப்போ தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என கூறினார். 

Advertisements

fogpriya

Next Post

பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடந்த நடிகர் "சதிஷ்" திருமணம்..!

Wed Dec 11 , 2019
தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் நடிகர் சதிஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.வைபவ் நடிப்பில் வெளியான சிக்சர் படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவைத் தான் சதிஷ் திருமணம் செய்துள்ளார்.நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சதிஷின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் மற்றும் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் என பலரும் கலந்து கொண்டு சதிஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர். சதிஷ் – சிந்து திருமண […]

Actress HD Images

%d bloggers like this: