புடவையில் அசத்தும் “பிகில்” பாண்டியம்மா… இந்திரஜா ஷங்கரின் அழகிய புகைப்படம்..!!

சர்கார்’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான படம் ‘பிகில்’. விஜய், அப்பா – மகன் என டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஸ்போர்ட்ஸ் – ஆக்ஷன் ஜானரைக் கொண்ட இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.

மேலும், கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, அம்ரிதா ஐயர், ரெபா மோனிகா ஜான், வர்ஷா, இந்திரஜா ஷங்கர், ஐ.எம்.விஜயன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதில் ‘பாண்டியம்மா’ கேரக்டரில் வந்த இந்திரஜா ஷங்கர், பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்திரஜா ஷங்கர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ஷேரிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

Advertisements

Next Post

செம ஸ்டைலான போஸ்டர்... விக்ரமின் "கோப்ரா" பட நியூ லுக் போஸ்டர்..!!

Fri Feb 28 , 2020
விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து […]
%d bloggers like this: