மரண பயத்தை காட்டும் “இருட்டு” பேய் படம்..! டிவிட்டர் விமர்சனம்..!

சென்னை: இருட்டு படம் குறித்த விமர்சனங்கள் டிவிட்டரை மிரட்டி வருகின்றன. தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. தனுசு ராசி நேயர்களே, இருட்டு, குண்டு மற்றும் ஜடா. இந்த படங்கள் குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளன. குறிப்பாக படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் எப்படி உள்ளது என்பதை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி வெளியான படங்களில் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ள இருட்டு படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹாரர் படமான இருட்டு திரைப்படத்தை இயக்குநர் துரை இயக்கி இருக்கிறார்.சுந்தர் சிக்கு ஜோடியாக புதுமுகம் சாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லரிலேயே சுந்தர் சி, லிப் டூ லிப் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பது தெரிந்தது.

இந்நிலையில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் வழக்கமான பேய் படங்களை விடவும் மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீக்என்டின் என்டெர்டெய்ன்மென்ட் இந்த படம்தான் என்றும் ரசிகர்கள் விமர்சனம் கூறி வருகின்றனர்.

இருட்டு நல்ல படம்.. முதல் பாதி நல்லா இருக்கு இரண்டாம் பாதி அவ்ரேஜ்க்கும் மேல்.. நீண்ட க்ளைமேக்ஸ் செம என சிலர் கூறி வருகின்றனர். முதல்பாதி.. செம.. மிரட்டல்.. சூப்பர் ஊட்டி லொகேஷன்ஸ்.. என தெரிவித்திருக்கின்றனர் சிலர்.

ஓகே… சராசரி ஹாரர் படங்களை விடவும் பெட்டர்.. கடைசி 40 நிமிடம் படத்தை காப்பாற்றிவிட்டது என்று கூறியிருக்கின்றனர் சிலர்.

Advertisements

fogpriya

Next Post

உடலை பதப்படுத்தி பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு..!

Sat Dec 7 , 2019
ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் வரும் திங்கள்கிழமை வரை பதப்படுத்தி வைக்குமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையையும் வீடியோவாக எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் எரிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் முகமது ஆரிப், […]
%d bloggers like this: