ஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!!

முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் கம்ரேட்’, மகேஷ் பாபுவுடன்  ‘சரிலேரு நீக்கெவரு’ படத்திலும் நடித்திருந்த ராஷ்மிகா தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அதனை பணமாக பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் பெங்களூரு வீட்டில் கடந்த ஜனவரி 16ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 7.30 மணியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ராஷ்மிகா மந்தனா வீட்டில் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisements

Next Post

சீமானுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலம்.. குவியும் நாம் தமிழர் கட்சி ஆதரவு...

Mon Jan 20 , 2020
பிரபல நடிகை மீரா மிதுன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடுத்துக் கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழில் 8 தோட்டாக்கள் மற்றும் போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்தவர் மீரா மிதுன். பின்னர் பிக்பாஸ் சீசன் 3 –ல் கலந்துகொண்டு இயக்குனர் சேரனுடனான சர்ச்சை சண்டைகளால் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி ரசிகர்களோடு […]

Actress HD Images

%d bloggers like this: