நடிகர் விஜய் வீட்டில் ஐடி ரெய்ட் முடிந்தது…. ‘ஒத்த’ ரூபா கூட கண்டுபிடிக்க முடியல…!மாஸ் காட்டிய விஜய்..!!

நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை இரவு 8 மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர் டைன்மெண்ட் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயிடம் வருமான வரி அதிகாரிகள் நேரிடையாக விசாரணை மேற்கொண்டனர். அவரை அங்கிருந்து அப்படியே காரில் சென்னை அழைத்து வந்தனர். பனையூரில் உள்ள விஜயின் மற்றொரு வீட்டில் அதிகாரிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். ஏஜிஎஸ் நிறுவன  கணக்குகளும், அன்புச்செழியனின் கணக்குகளும் மாறுபட்டு இருந்ததே இந்த வருமான வரிசோதனைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனால் பிகில் படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளனர். ஆனால், உண்மையில் அவரது சம்பளம் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், விஜயிடம் இது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு அதிகாரிகள் அவரது மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடியை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை.

மேலும், அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி மறைக்கப்பட்டது கண்டுபிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜயிடம் இருந்து ஒத்த பைசா கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த ஆவணங்களுனம் அதிகாரிகள் கைகளில் சிக்கவில்லை. இதையடுத்து இரவு 8 மணி அளவில் தங்களது சோதனையை  முடித்துக் கொண்டனர். 2 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை முடிவு பெற்றதாக வருமான வரித்துறை கூறி இருக்கிறது.

Advertisements

Next Post

விஜய்-க்கு ரூ.1,200 கோடி சொத்து..? ஆதாரங்களை காட்டிய வருமான வரித்துறை..!!

Fri Feb 7 , 2020
நடிகர் விஜயின் சொத்து விவரங்களை பக்காவாக கையில் வைத்துக் கொண்டு தான் பனையூர் வீட்டில் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி போட்டு இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நாளாக நேற்று மாறியிருக்கிறது. நடிகர் விஜயை கொத்தாக தங்களது காரில் அள்ளிக் கொண்டு சென்னை பறந்த போதும், பனையூரில் நடந்த சம்பவங்கள் பற்றியும் விசாரித்தால் திடுக்கிடும் காட்சிகள் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. […]
%d bloggers like this: