பிரபல நடிகையுடனான கிசுகிசு பற்றி நடிகர் ஜெய் விளக்கம்..!

நடிகை அஞ்சலியுடன் காதலில் இல்லை என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். எங்கேயும் எப்போதும், பலூன் உட்பட சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் ஜெய் – அஞ்சலி. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டானதாக கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும், அதோடு விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை ஆரம்பம் முதலே இருவரும் மறுத்து வருகின்றனர். இருந்த போதும் தொடர்ந்து இது போன்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி மீண்டும் ஜெய் பேசியுள்ளார். அதில் அவர், ‘எனக்கே தெரியாத விஷயங்களை மக்கள் கூறுகிறார்கள். கல்யாணம் சந்தோஷமான விஷயம், அது முடிவானால் கண்டிப்பாக மக்களிடம் தெரிவிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார். அதோடு, அஞ்சலியுடன் காதல் எனப் பரவும் செய்தி குறித்து பேசுகையில், ‘அஞ்சலியுடன் காதலில் இல்லை என்றும் அவரை வருங்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை’ என்றும் ஜெய் கூறியுள்ளார். மேலும் ஜெய் தனது பெயரை அஜீஸ் ஜெய் என மாற்றிக் கொள்ள இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜெய் அடுத்ததாக எண்ணித் துணிக என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது 27வது படம் ஆகும்.

Advertisements

fogpriya

Next Post

ட்விட்டரில் கலக்கும் ஹீரோ "மாஸ்டர் மகேந்திரன்"..!

Fri Dec 20 , 2019
குழந்தை நட்சத்திரமாக மின்னிய மகேந்திரன் ஹீரோவாக நல்ல கதையை தேடி வருகிறார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தைப் பதிவேற்றி, பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார். நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நமக்கெல்லாம் அறிமுகமாகியவர் மாஸ்டர் மஹேந்திரன். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகுமிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக மின்னினார் மகேந்திரன். அவருக்கு அடுத்து அடுத்து படங்கள் குவிந்தன. ‘தாய்குலமே தாய்குலமே’ […]
%d bloggers like this: