பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை….தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதம் லீக்…

பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.  பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயஸ்ரீ தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 இந்நிலையில் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மகளே அம்மா உன்னை மிகவும் நேசிக்கிறேன். அது உனக்கும் தெரியும். நான் என் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். என்னை மன்னித்துவிடு.
 நான் இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது. நல்லப் பெண்ணாக இரு. நடனத்தை ஒருபோதும் கைவிடாதே. என்னுடைய ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும். எனக்காக நீ ஒருபோதும் வருத்தப்படாதே.

அம்மா, அக்கா என்னை மன்னித்துவிடுங்கள். என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் அழைத்த போதெல்லாம் எனக்கு உதவிய உங்களுக்கு நன்றி. நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். கணவர் ஈஸ்வரும் அவரது பெற்றோரும் என்னை இன்று இந்த நிலைக்கு தள்ளிவிட்டனர். நான் வழக்கத்தை விட கூடுதலாக தூங்க போகிறேன். உணவும் சரியாக கிடைக்கவில்லை, வேலையும் கிடைக்கவில்லை. இது போன்ற அனுபவங்களால் நான் எங்கே பைத்தியம் ஆகிவிடுவேனோ என்ற கவலை உள்ளது.

இதற்கு மேலும் இந்த பிரச்சினைகளை என்னால் சந்திக்க முடியவில்லை. இவற்றை எதிர்த்து போராடினேன். ஆனால் இதற்கு மேலும் போராட என்னால் முடியாது. எந்த நம்பிக்கையும் இல்லை. இறந்தால் மட்டுமே நான் நிம்மதியாக இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisements

Next Post

பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி...

Fri Jan 17 , 2020
தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. நடிகை ஜெயஸ்ரீக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது கணவர் ஈஸ்வர் தன்னுடன் நடிக்கும் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் பிணையில் இருந்து பின் வெளியே […]
%d bloggers like this: