பதுங்கி இருந்த ஜீவா..! சீறுவது எப்போ..? ‘சீறு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதிஅறிவிப்பு…

ஜீவா கதாநாயகனாக நடிக்கும் ‘சீறு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’ திரைப்படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சீறு’. இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டெர்னேஷ்னல் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். அதெபோல், ஜீவாவுக்கு வில்லனாக ‘அறிந்தும் அறியாமலும்’ நவ்தீப் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.

கடைசியாக ‘கொரில்லா’ திரைப்படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல், நினைத்த அளவுக்கு வெற்றிபெறாமல் போன நிலையில், ‘சீறு’ படம் ஜீவாவுக்கு ஒரு நல்ல கம் பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திலிருந்து, டி. இமான் இசையில் நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் குரலில் ‘செவ்வந்தியே’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசியில் சில காரணங்களால் தள்ளிப்போடப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வேல்ஸ் ஃபில்ம் இண்டெர்நேஷனல் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து, வரும் பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி சீறு வெளியாவது உறுதியாகியுள்ளது. ஜீவாவுக்கு சீறு படத்தையடுத்து, ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜிப்ஸி’, அருள்நிதியுடன் இணைந்து ‘களத்தில் சந்திப்போம்’ மற்றும் பாலிவுட்டில் ரன்வீர் சிங்குடன் ‘83′ ஆகிய படங்கள் வரிசையாகக் காத்திருக்கிறது.

Advertisements

Next Post

மாநாடு படத்தில் சிம்புவுடன் மோதல் ?மீண்டும் வில்லனாக அரவிந்த் சுவாமி...!

Wed Jan 8 , 2020
சிம்பு நடிப்பில் மீண்டும் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் அரவிந்த் சுவாமி. ஒருவழியாக சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முன்னை விட மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷனை அடுத்து இப்போது நடிகர் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக வில்லன் கதாபாத்திரத்தில் […]
%d bloggers like this: