நான் அவன் இல்லை புகழ் ஜீவனி-ன் “பாம்பாட்டம்” முதல் ஹாரர் படமாகும்… 5 மொழிகளில் தயாராகிறது…

நான் அவன் இல்லை புகழ் ஜீவன் பாம்பாட்டம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை 5 மொழிகளில் இயக்கப்போவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். யூனிவர் சிட்டி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் தான் நடிகர் ஜீவன் அந்த படத்தில் காதலனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து இருப்பார். அந்த படம் ஓரளவுக்கு பேசப்பட்டது. அதன் பின் காக்க காக்க படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். அந்த படம் மிகவும் ஹிட்டாகி அவருக்கு நல்ல பெயர் தேடித்தந்தது. மேலும் சிறந்த வில்லனுக்கான விருதையும் அந்த படம் அவருக்கும் வாங்கி தந்தது.

அடுத்தாக திருட்டுப்பயலே இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை கையில் எடுத்து நடித்து அசத்தி இருப்பார். பின்னர், ஜீவன் நடித்த நான் அவன் இல்லை இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று கூட சொல்லலாம் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும், மச்சக்காரன், தோட்டா, நான் அவன் இல்லை2 போன்ற படங்களின் தோல்வியால் கடந்த சில ஆண்டுகளாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் ஜீவன் தற்போது வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் தயாரிக்கும் பாம்பாட்டம் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இது ஜீவன் நடிக்கும் முதல் ஹாரர் படமாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்தளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார் வி.சி.வடிவுடையான். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் ஜீவன் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள். நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம் மாதம் நடைபெற உள்ளதாக இயக்குனர் வடிவுடையான் தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

"ட்ரிப்"படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்...கடத்தல் படமா இருக்குமோ? மரண வெயிட்டிங்...

Sat Jan 4 , 2020
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, சுனைனா, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுனைனாவை ஒரு ஜீப்பின் மீது கட்டிவைத்து, யோகி பாபுவும், கருணாகரனும் சீட்டு ஆடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் […]

Actress HD Images

%d bloggers like this: