ஆஸ்கர் அப்டேட்ஸ்: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற “ஜோக்கர்”..!!

2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் எதிர்பார்த்தபடியே சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் திரைப்படம் வென்றுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2020ம் ஆண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் ஜோக்கர் பட நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ் மற்றும் லியார்னாடோ டிகாப்ரியோ உள்ளிட்ட நடிகர்கள் போட்டியில் இருந்தனர். எனினும் சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கரில் நடித்த ஜோக்கின் பீனிக்ஸுக்குதான் கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கின் பீனிக்ஸ் வென்றுள்ளார். இதற்கு முன்பு மூன்று முறை ஆஸ்கர் பரிந்துரையில் வந்தும் பீனிக்ஸ் விருது பெறவில்லை. நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டு முதல் முறையாக ஜோக்கின் பீனிக்ஸ் விருதை வென்றுள்ளார். மேலும் சிறந்த இசைக்கான பிரிவிலும் ஜோக்கர் விருதை தட்டி சென்றுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட் ‘ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்’ படத்திற்காக பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதை பாரசைட் படம் வென்றுள்ளது.

Advertisements

Next Post

ஆஸ்கர் விருதுகள் 2020...வெற்றி பெற்ற படங்களின் பட்டியல்..!!

Mon Feb 10 , 2020
2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் வெற்றிபெற்ற படங்களின் முழுப்பட்டியல்… சிறந்த திரைப்படம் – பாரசைட்சிறந்த நடிகர் – ஜோக்கின் பீனிக்ஸ் (ஜோக்கர்)சிறந்த நடிகை – ரெனி ஷெல்வெகர் (ஜூடி)சிறந்த துணை நடிகர் – ப்ராட் பிட் (ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட்)சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)சிறந்த அனிமேசன் திரைப்படம் – டாய் ஸ்டோரி 4 சிறந்த ஒளிப்பதிவு – ரோஜர் டிக்கின்ஸ் […]
%d bloggers like this: