தல “அஜித்” நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் “கே.எஸ்.ரவிகுமார்” இயக்குகிறாரா? பரபரப்பு தகவல்..!!

அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்குவதாக வந்த தகவல் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, மீனா, குஷ்பு உட்பட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குவதாக செய்திகள் வெளியாயின. சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய்தி வேகமாக பரவியது.

இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், என் பெயரில் உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து, அஜித்குமார் படத்தை நான் இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. எனக்கு ட்விட்டர் கணக்கு இல்லை. அது என் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட கணக்கு. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் படத்தை நான் இயக்குவதாக வரும் தகவல்கள் தவறான வை. நேற்றில் இருந்து இந்தப் பொய் தகவல் வேகமாக பரவி வருகிறது. அதையும் என் பெயரில் உள்ள அந்த ட்விட்டர் கணக்கையும் ரசிகர்களும் மீடியாவும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார், அஜித் நடிப்பில் ஏற்கனவே வில்லன், வரலாறு படங்களை இயக்கியுள்ளார்.

Advertisements

Next Post

அமெரிக்காவில் 92 வது "ஆஸ்கர் விருது விழா" துவங்கியது....திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு..!!

Mon Feb 10 , 2020
உலகமே எதிர்ப்பார்த்துள்ள, இந்த ஆண்டுக்கான 92 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்நகரில் நாளை காலை ( இந்திய நேரப்படி இன்று இரவு ) நடைபெறவுள்ளது. இந்த விருது விழாவில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான திரைஉலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவின் லாஸ் […]
%d bloggers like this: