மாலத்தீவில் “காஜல் அகர்வால்” ஜாலி ட்ரிப்..!

நடிகை காஜல் அகர்வால், படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த கேப்பில் மாலத்தீவு சென்றுள்ளார். தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இதில் வயதான கேரக்டரில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மும்பை சாகா என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையே, படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த கேப்பில், குடும்பத்துடன் ஜாலியாக மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவரது அப்பா வினய், அம்மா சுமன், தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால், அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் உள்ளனர். நிஷா, தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். அந்தப் புகைப்படத்துக்குக் கீழே, நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுமுறை கிடைத்து விட்டது. அதற்கு மாலத்தீவில் உள்ள இந்த ரிசார்ட்டை தவிர வேறெதுவும் சிறப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisements

fogpriya

Next Post

"கீத்திகா திவாரி"-யுடன் இணைந்து டூயட் பாடும் "லெஜண்ட் சரவணா"..!

Sat Dec 21 , 2019
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் – ஜேடி – ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் கதாநாயகியாக கீத்திகா திவாரி என்கிற புதுமுகம் நடிக்கிறார். பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான டூயட் பாடலுக்காக […]

You May Like

%d bloggers like this: