நடிகை “காஜல்”-க்கு ரசிகர்கள் டிவீட்.. “அழகு சிலைக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை”

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வால் மெழுகு சிலை திறக்கப்படுகிறது. தமிழில், துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, பாயும் புலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்துவருகிறார். இவரது மெழுகு சிலை, சிங்கப்பூரில் உள்ள, மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட இருக்கிறது.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டன் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளது. இங்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்களின் பிரபலங்களில் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில், காஜல் அகர்வாலின் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இந்த சிலை திறந்து வைக்கப்படுகிறது. இதற்காக அவர் அங்கு செல்கிறார்.

இத்தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். எனது மெழுகு சிலை, மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்படுவது உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று காஜல் தெரிவித்துள்ளார்.

மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைக்கப்படும் முதல் தென்னிந்திய நடிகை இவர்தான் என்று தெரிகிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Advertisements

fogpriya

Next Post

'வி1 மர்டர் கேஸ்' டிரைலரை வெளியிட்ட தனுஷ்..!

Wed Dec 18 , 2019
பவேல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள வி1 மர்டர் கேஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.டி40 படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி படமாக உருவாகியுள்ள வி1 படத்தின் டிரைலரில் கொலைகாரன் யாராக இருப்பான் என்ற ரீதியில் புலனாய்வு நடைபெற்று வருகிறது. லோ பட்ஜெட்டில் ஷார்ட் பிலிம் போல படம் எடுக்கப்பட்டிருந்தாலும், டிரைலரில் போர் அடிக்காத விஷயங்கள் […]

Actress HD Images

%d bloggers like this: