பிரபல நடிகருக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்தில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. நடன இயக்குனராக பல படங்களுக்கு பணியாற்றி வரும் பிருந்தா இப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். 

Advertisements

Next Post

ரவுடி பேபி போல் சொக்காவை இழுத்து கட்டி...போஸ் கொடுத்த ராஷி கண்ணா..!!

Fri Jan 31 , 2020
Advertisements

Actress HD Images

%d bloggers like this: