தமிழ் நன்றாக பேசத் தெரிந்தும் நடிக்க வாய்ப்பில்லை…. ஏங்கிய கல்கி கோச்சலினு-க்கு வாய்ப்பு கொடுத்த விக்னேஷ் சிவன்..!!

விக்னேஷ் சிவன் இயக்கும் வெப் சீரிஸில் நடிகை கல்கி கோச்சலின் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிம்பு நடித்த போடா போடி, விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். பெரிய பட்ஜெட் படமான இதை லைகா தயாரிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது வேறு நிறுவனத்திடம் பேசிவருகிறார் விக்னேஷ். இதற்கிடையெ வெப் சீரிஸ் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். இந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடர் வெளியானது. அதை அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். பின்னர் இவர்களே கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற தொடரை இயக்கி இருந்தனர்.

அதே போல தமிழிலும் வெப் தொடர் ஒன்றை நான்கு இயக்குனர்கள் இயக்குகின்றனர். இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா ஆகியோர் அவர்கள். சுதா கொங்கரா இயக்கும் தொடரில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கும் தொடரில் இந்தி நடிகை கல்கி கோச்சலின் நடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள கல்கி, இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

பின்னர் கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்துவரும் கல்கி, இப்போது கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையே தமிழ் நன்றாக பேசத் தெரிந்தும் தனக்கு தமிழில் நடிக்க வாய்ப்பில்லை என்று கூறிவந்தார். இந்நிலையில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு பாடலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

Advertisements

Next Post

பிரபல கூடைப்பந்து வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்...அதிர்ச்சியில் விளையாட்டு வீரர்கள்..!!

Mon Jan 27 , 2020
உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் தனது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் பிறந்த கோப் பிரயண்ட் மிகக் சிறிய வயதிலேயே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். அவரது தந்தை ஜோ பிரயண்ட் பிரபலமான என்.பி.ஏ. கூடைப்பந்துப் போட்டி வீரர் என்பதால் மகனை ஊக்கப்படுத்தினார். குடும்பத்துடன் இத்தாலியில் குடிபெயர்ந்த ஜோ […]

Actress HD Images

%d bloggers like this: