மக்களை பாதிக்கும் மருத்துவ கழிவுகள்… இயக்குநர் ‘ஹரி உத்ரா’ 3வது திரைப்படம்… “கல்தா” ஒரு புதுமைப் படைப்பு….விரைவில்..!!

மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல்  படமாக “கல்தா” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. நாயகன் சிவ நிஷாந்த் நடிக்கும் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஹரி உத்ரா, தயாரிப்பாளர் ரகுபதி, நாயகன் சிவ நிஷாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஹரி உத்ரா, “கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வச்சு இந்தப்படம் பண்ணியிருக்கோம். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். அய்ரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார்.  

கல்தா என்பது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி என்னுடைய நெடு நாள் நண்பர். நான் கதை சொன்னபிறகு ரொம்ப ஈடுபாட்டோட இதில் நடிச்சி கொடுத்திருக்கார். புதுமுக நாயகன் சிவ நிஷாந்த் ரொம்ப அருமையா நடிச்சிருக்கார். அப்பாவை பற்றி ஒரு அற்புதமான பாடல் வைரமுத்து பண்ணியிருக்கார். இந்தப்படம் எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது அரசியல் கலந்து இருந்தாலும் ரொம்ப தைரியமா இந்தப்படத்த தயாரிச்சிருக்கார் ரகுபதி சார். ஒரு தரமான கமர்ஷியல் படமா இத உருவாக்கியிருக்கோம். படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்திட்டு இருக்கு பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கோம் என அவர் கூறினார்.

Advertisements

Next Post

பேட்மிண்டன் வீராங்கனை"பி.வி.சிந்து" உறுதி..அடுத்த இலக்கு என்ன தெரியுமா?

Fri Jan 3 , 2020
எனது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தான் என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார் பி.வி,சிந்து. இதனால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பி.வி.சிந்து, “விளையாட்டில் தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று வருகிறேன். நான் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: