கமல், இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு… திரையுலகில் பரபரப்பு…

இந்தியன் -2  படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும்  இந்தியன் – 2 படப்பிடிப்பு, பிரம்மாண்ட பொருட்செலவில், சென்னை பூந்தமல்லி அருகே,ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது.

‘இந்தியன்2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இணை இயக்குநர் குமார், நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  அதன் அடிப்படையில் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்‌ஷன் மேலாளர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக விசாரித்து வரும் போலீசார், நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். அத்துடன், விபத்து நேரத்தில் உடனிருந்த உதவி இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப, காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவர்களை விசாரிப்பதன் மூலம் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் கருதுகின்றனர்.

Advertisements

Next Post

மூடப்பட்ட தாஜ்மஹால்... பொதுமக்கள் பார்வையிட அனுமதி ரத்து...

Fri Feb 21 , 2020
Advertisements
%d bloggers like this: