திரையுலக நாயகன் கமலுக்கு வயது 65

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 65-வது பிறந்தநாள்… குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி நிற்கும் சாதனை நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு இதோ…

5 வயது சிறுவன் தனது தீர்க்கமான கண்களால் சோகத்தை வெளிப்படுத்தி அனைவரையும் நெகிழ வைத்த காட்சி இது…. இப்படி அறிமுகமாகிய கமல்ஹாசனுக்கு, சிறுவயதிலேயே எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அரும்பு மீசையுடன், பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படங்களில் நடிகராக உருவெடுத்தார் கமல்ஹாசன்…

பேச முடியாதவராக, பார்வையற்றவராக, உடல்ஊனமுற்றவராக நடிப்பில் மிளிர்ந்து, இந்தியனில் தாத்தாவாகவும் தசாவதாரத்தில் பத்து அவதாரங்களாகவும் நடிப்பில் புதிய பரிணாமம் காட்டிவர் கமல்ஹாசன்…அவ்வை சண்முகியில் பெண்ணாகவும், அபூர்வ சகோதரர்களில் குள்ளமாகவும் நடித்து அசத்தினார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மானசீக மாணவனாக தம்மை வளர்த்துக் கொண்ட கமல்ஹாசன் அவருடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

கமலுடன் ரஜினி இரண்டாம் நாயகனாக நடித்தபோது தொடங்கிய ஆழமான நட்பு, அதன்பின்னர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தபோதும் தொடர்ந்து 40 ஆண்டுகளாக இன்றும் நீடிக்கிறது.

நடிப்பிற்காக தன்னை வருத்திக் கொள்வதில் கமலுக்கு நிகர் கமல்தான்.. இந்தியில் கோவிந்த் நிகலானியின் நக்சலைட்டுகள் தொடர்பான கதை குருதிப்புனலாகவும், மகாத்மா காந்தி கொல்லப்பட்ட சம்பவம் ஹே ராமாகவும் திரைக்கு வந்தன. நடுவீதியில் அதிகார வர்க்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட நாடகக் கலைஞர் சப்தர் ஹாஷ்மியின் வேடத்தை அன்பே சிவத்தில் வெளிப்படுத்தினார் கமல்ஹாசன்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், நடனக் கலைஞர் என பன்முக ஆளுமையுடன் திகழும் கமல்ஹாசன், இனிமையான குரலில் ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்தன்மூலம் பிறமொழி பேசும் மாநிலங்களிலும் எண்ணற்ற ரசிகர்களை ஈர்த்தவர் கமல்ஹாசன்..

40 ஆண்டுகளாக நற்பணி மன்றம் மூலம் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கமல், கடந்த ஆண்டு மக்கள் நீதிமய்யம் கட்சியைத் தொடங்கி மக்கள் நலப் பணியைத் தொடர்ந்து வருகிறார்..

நடிப்புத்துறையைத் தேர்வுசெய்து, அதில் கால்பதித்து, முத்திரை பதித்து 60 ஆண்டு காலத்தை எட்டிய நிலையில் இன்றும் சாதனை நாயகனாக விசுவரூபம் எடுத்து நிற்கிறார் கமல்ஹாசன்…

Advertisements

Next Post

சிறுவன், சிறுமி கடத்திக் கொலை- குற்றவாளிக்கு தூக்கு உறுதி

Thu Nov 7 , 2019
கோவையில் சிறுவன், சிறுமி கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.  கோவையை சேர்ந்த துணி வியாபாரி ஒருவரின் 11 வயது மகள் மற்றும் 8 வயது மகன் ஆகியோர் கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கடத்தப்பட்டனர். கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவர் அந்தக் குழந்தைகளைக் கடத்திச் சென்று தனது நண்பர் மனோகரன் உதவியுடன் கழுத்தை நெரித்தும், […]
%d bloggers like this: