இந்தி-க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – கங்கனா ரணாவத் அறிவுரை…

தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான கங்கனா ரணாவத், இந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இந்தி திவஸ் (இந்தி தினம்) தினத்துக்காக கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இந்தி நம் தேசிய மொழி. ஆனால் அதை பேச நாடு மிகவும் யோசிக்கிறது. நம்பிக்கையுடன் ஏபிசிடி சொல்கிறார்கள். ஆனால் அதையே இந்தியில் சொல்ல நம்பிக்கை வருவதில்லை. 

தங்கள் பிள்ளைகள் அற்புதமாக ஆங்கிலத்தில் பேசுவதாகப் பெருமையுடன் கூறுகிறார்கள் பெற்றோர்கள். தங்களுடைய ஆங்கிலம் பலவீனமாக இருந்தால் அதற்காக அவமானப்படுகிறார்கள். ஆனால் அதே நிலை இந்தியில் இருந்தால் துளி வருத்தம் ஏற்படுவதில்லை.

திரையுலகம் என்னுடைய ஆங்கிலத்தை கண்டு கேலி செய்துள்ளது. விமர்சனம் செய்துள்ளது. ஆனால் இந்திக்குத்தான் நான் முன்னுரிமை அளிக்கிறேன். இதன்மூலம் என்னால் பெரிய உயரத்தை அடைந்து வெற்றியை அடைய முடியும். பெற்றோர்களே, இந்தியை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். நாட்டு நெய் மூலம் உருவாக்கப்படும் பரோட்டாவில் உள்ள ருசி பீட்சா, பர்க்கரில் கிடைக்காது. மா (அம்மா)-வில் உள்ள அன்பு, மாம்-மில் கிடையாது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisements

Next Post

அமலா பாலின் "அதோ அந்த பறவை" படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்..!

Sun Jan 12 , 2020
அமலாபாலின் நடிப்பில் கடந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற படம் ஆடை. சோலோ ஹீரோயினாக அவர் நடித்த இப்படத்தின் கம்யூனிச கொள்கைகளும் இடம் பெற்றது. சில பணப்பிரச்சனைகளுக்கு படம் வெளியான போதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இது பலருக்கும் அதிர்ச்சி தான். இந்நிலையில் அதோ அந்த பறவை என்ற அவரின் அடுத்த படத்தின் மீது பலரின் கவனம் இருக்கின்றது. ஆர்.எஸ்.மணி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா […]
%d bloggers like this: