கார்த்தி-யின் ‘தம்பி’ படத்தை ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்..!

கார்த்தி நடித்துள்ள தம்பி படத்தை, தமிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படம், தம்பி. சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர், மோகன்லால், மீனா நடித்து சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். இதை தமிழில், கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.

இதையடுத்து தமிழில் அவர் மீண்டும் இயக்கியுள்ள படம், தம்பி. வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆனது.படம் நன்றாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டி எழுதி வருகின்றனர். காமெடி த்ரில்லர் படமான இது முதல்பாதியில் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் இருக்கும் ட்விஸ்ட் ரசிக்க வைப்பதாக, ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வழக்கம் போல தங்கள் வேலையை காட்டிவிட்டது தமிழ் ராக்கர்ஸ். கருணையே இல்லாமல் அனைத்துப் படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ், இந்தப் படத்தையும் ஒரு நாள் கூட விட்டு வைக்கவில்லை.படம் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களிலேயே, ஆன்லைனில் வெளியிட்டுவிட்டனர். இதனால் தம்பி படத்தின் தயாரிப்பாளர்களான வயாகாம் 18 நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisements

fogpriya

Next Post

"தம்பி" படம் உணர்த்தும் கதை..!

Sat Dec 21 , 2019
15 வருடங்களாக காணாமல் போன தம்பியை நினைத்து எங்கும் அக்காவின் கதை மற்றும் தனது மகன் மீண்டும் வர வேன்டும் என்று என்னும் அப்பாவின் கதையும் என்றும் சொல்லலாம். தம்பி என்ற தலைப்பு சீமான் இயக்கிய 2006 வருடத்தின் மாதவன் படத்திற்கு வைக்கபட்டு இருந்தது ,அந்த தலைப்பை மீட்டெடுத்து இந்த படத்தில் வைத்து இருக்கிறார்கள் .அது ஒரு அரசியல் படம் இது அப்படியே அதற்கு எதிரான ஒரு குடும்ப படம். […]
%d bloggers like this: