போடுறா வெடிய !!!! நடிகை கஸ்தூரி-யின் கலக்கலான டுவீட்..

அஜித் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே அவ்வப்போது டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு வந்தது தெரிந்ததே. இதன் உச்சமாக கடந்த இரண்டு நாட்களாக கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் படு மோசமாக விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த நடிகை கஸ்தூரி இதுகுறித்து அஜித் மற்றும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு டுவிட்டர் மூலம் புகார் அனுப்பினார். நீங்கள் மௌனமாக இருப்பதனால் உங்களது ரசிகர்கள் எல்லை மீறியுள்ளனர் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.

மேலும் டுவிட்டர் இந்தியாவுக்கும் தனது புகாரை கஸ்தூரி அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது டுவிட்டர் இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்து, கஸ்தூரியை அவமரியாதை விமர்சனம் செய்தவரின் டுவிட்டர்கணக்கை முடக்கி உள்ளது. இதற்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி ’நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும்’ போட்றா வெடிய’ என்று பதிவு செய்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements

Next Post

இயக்குநர் மிஷ்கின் விலகல்!! துப்பறிவாளன் 2 படத்தை யார் தான் இயக்க போகிறார்கள்... நடிகர் விஷால் வெளியிட்ட தகவல்

Thu Mar 12 , 2020
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, வினய், பாக்கியராஜ், அனு இமானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. துப்பறிவாளன் பெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணி தொடங்கியது. […]
%d bloggers like this: