பிக் பாஸ்-க்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறாரா கவின்?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவின். அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கினார்.

அவரது முதல் திரைப்படம் சற்று காலதாமதமாக வெளியான நிலையில், மக்களின் மனம் கவர, விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளில் சிக்கி காதலில் விழுந்த கவின், ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து கவின் சினிமாவில் கவனம் செலுத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கவின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ திரைப்பட நடிகர்  தர்ஷனும், பிரபல திரைப்பட இயக்குநரும், சிவகார்த்திகேயனின் நண்பருமான நெல்சன் திலீப்குமாரும் இடம்பெற்றுள்ளனர்.

Advertisements

fogpriya

Next Post

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?.. கோவா பட விழாவில் ஷாக் தந்த நித்யாமேனன்..!

Fri Nov 29 , 2019
சினிமா மீதான தனது காதல் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் போன்றது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரைப்பட வல்லுனர், நடிகர், நடிகையர், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் தினமும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். நேற்றைய கலந்துரையாடலில் நடிகை நித்யா மேனன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், […]
%d bloggers like this: