“கீர்த்தி சுரேஷ்” சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். காரணம் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாககொண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இன்னொரு சாவித்ரி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லுமளவிற்கு அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் 66வது தேசிய விருதுகள் அறிவிப்பின் போது சிறந்த நடிகையாக  கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில் தற்போது மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் பெற்றார் நடிகை கீர்ச்சி சுரேஷ். இதன் மூலம் அவர் தென்னிந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்தது மற்ற நடிகர், நடிகைகளை ஊக்குவித்துள்ளார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisements

fogpriya

Next Post

மீண்டும் இணைந்த "தனுஷ்" மற்றும் "அனிருத்"..!

Tue Dec 24 , 2019
கடந்த சில ஆண்டுகளாக அனிருத் மட்டும் தனுஷ் இணையாத காரணத்தினால் வேலையில்லா பட்டதாரி மற்றும் மாரி ஆகிய படங்களில் கேட்ட பாடல்களை ரசிகர்கள் கேட்க முடியாத நிலை உள்ளது. இதனால் மீண்டும் அனிருத் மற்றும் தனுஷ் எப்போது இணைவார்கள் என இரு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனை அடுத்து சமீபத்தில் பேட்டியளித்த அனிருத் மீண்டும் தனுஷுடன் இணைந்து பணிபுரிவேன் என்று கூறியது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இதன் முதல் […]
%d bloggers like this: