லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார்…ஹாஸ்டேக்கில் ட்ரெண்டாகும் அதுல்யா ரவி…..

லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார் அதுல்யா என்ற ஹாஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. கோலி குண்டு கண்ணழகி அதுல்யாவுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஓர் ஈர்ப்பு உண்டு. தன் அழகான சிரிப்பாலும், கொஞ்சி பேசும் பேச்சாலும் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அதுவும் சமூக வலைத்தளங்களில் இவரின் புகைப்படத்திற்கு லைக், கமாண்ட் போடுவதற்கு என்றே ஒரு கூட்டம் இவர் பின்னால் இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற ஜீ சினி விருது வழங்கும் நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை சந்தித்தார் அதுல்யா. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பெரிதும் பகிரப்பட்டது. இதை பார்த்த அதுல்யாவின் ரசிகர்கள் லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார் அதுல்யா என்று கூற அதை பின் ஹாஸ்டேக்காக மாற்றி அதுல்யா புகைப்படங்களை லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார் அதுல்யா என்று டிரெண்ட் ஆக்கிவிட்டனர் . தற்போது அதுல்யா ரசிகர்களின் இந்த ஹாஸ்டேக்கை பலரும் கவனிக்க துவங்கிவுள்ளனர். இது முதலில் நயன்தாரா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தது , ஆனால் அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏன் இதை அதுல்யாவே கண்டும் காணாமல் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

நயன்தாராவின் பயணம் பற்றியும் அவர் கடந்து வந்த பாதை பற்றியும் தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரியும். அவர் நடிப்புக்கும் அவர் திறமைக்குத் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதுல்யா ரசிகர்கள் சிலர் இப்படி செய்வது பலரையும் சிரிக்க வைத்து இருக்கிறது . அதுல்யாவும் கடினமாக போராட்டங்களை கடந்து வந்து இருக்கிறார் ஆனால் ஆரம்ப கட்டத்திலே ரசிகர்கள் இப்படி செய்வதனை நிராகரித்து கருத்து பதிவிட்டு இருக்க வேண்டும் என்றும் அதுல்யாவின் கமெண்டில் சிலர் கூறி வருகின்றனர்.

அதுல்யா தற்போது ஒரு இணைய தொடரில் நடிக்க போவதாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். அந்த இணைய தொடருக்கு அதிகாரம் என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது. மேலும் அதுல்யா சமுத்திரகனி சசிகுமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் நாடோடிகள் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.அதற்கடுத்து சிபிராஜ் உடன் வட்டம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Advertisements

Next Post

வருங்கால கணவர் இப்படி தான் இருக்கனும்மா?... கண்டீஷன் போட்ட யாஷிகா ஆனந்த்...கடுப்பான ரசிகர்கள்....!

Fri Jan 10 , 2020
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.    இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து யாஷிகா அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை […]
%d bloggers like this: