மாஃபியா’ ரிலீஸ் தேதி மாற்றம்..!

அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குநருக்கு டெங்கு காய்ச்சல் வந்தபோதும்கூட படப்பிடிப்பை நிறுத்தாமல், தொடர்ந்து படம் பிடித்துள்ளனர்.எனவே, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. ஆனால், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘மாஃபியா’ படத்தின் இரண்டாவது டீஸரில், 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியீடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி மாற்றத்துக்கான காரணம் என்னவெனத் தெரியவில்லை.

Advertisements

fogpriya

Next Post

ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண் யார் ? 'பிரியங்கா சோப்ரா'-க்கு எத்தனையாவது இடம்?

Fri Dec 13 , 2019
ஆசியாவின் கவர்ச்சிக்கரமான பெண்ணாக, பாலிவுட் நடிகை ஆலியா பட் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற நாளிதழ் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் யார் என்று வருடம்தோறும் வாக்கெடுப்பு நடத்தி பட்டியல் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இளம் ஹீரோயின் ஆலியா பட், இந்த ஆண்டின் கவர்ச்சிக்கரமான ஆசிய பெண் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் டாப் ஹீரோயினான தீபிகா படுகோன், பத்து வருடங்களுக்கும் மேலாக […]
%d bloggers like this: