“தளபதி 64” படத்தில் இணைந்த இரண்டு வில்லன் நடிகர்கள்..!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது சில நட்சத்திரங்கள் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மெயின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் அதனை அடுத்து கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூந்தாஸ் என்ற நடிகரும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கமலஹாசன் நடித்த மகாநதி படத்தில் நடித்த மகாநதி சங்கர்
மற்றும் ஒரு சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்த சாய்தீனா ஆகியோர்களும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இரண்டு வில்லன்கள் இந்த படத்தில் இருக்கும் போது மேலும் இரண்டு வில்லன் நடிகர்கள் ’தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிவரை இங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ’தளபதி 64’ படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பு தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது

Advertisements

fogpriya

Next Post

காதலுக்காக பேய் பிடித்ததாக நாடகம் ஆடிய பெண்– வெளுத்து வாங்கிய "திருநங்கை" பேயோட்டி..!

Mon Dec 16 , 2019
சேலத்தில் பேய் பிடித்ததாக நாடகம் ஆடிய பெண் ஒருவரை பூசாரி ஒருவர் பிரம்பால் கடுமையாக அடித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகிவருகிறது. சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பம்சம் இதில் பூசாரியாக திருநங்கை ஒருவர் செயல்பட்டு வருவதுதான். அதனால் இந்த கோயிலில் வழிபடுவதற்கும் பூசாரியிடம் குறி கேடபதற்கும் கூட்டம் வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பேய் பிடித்ததாக சொல்லி இவரிடம் […]
%d bloggers like this: