பிக்பாஸ் ‘மகத்’ தொழில் அதிபர் ‘பிராச்சி மிஸ்ரா’-வை கைப்பிடித்தார்..!!

நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவருமான மகத், அவரது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டார். மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.

இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார். படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். தற்போது இவர்கள் திருமணம் இன்று காலை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் திருமண விழாவில் கலந்துக் கொண்டார்கள்.
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திருமணத்திற்கு நேரில் சென்று மகத் மற்றும் பிராச்சி மிஸ்ராவை வாழ்த்தினார்கள்.

Advertisements

Next Post

இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில்.. இளம் நடிகை ராஷி கண்ணா..!!

Sun Feb 2 , 2020
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அயோக்யா மற்றும் அடங்கமறு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இதனால் இளைஞர்களின் மனதுக்குள் தனியாக சேர் போட்டு அமர்ந்து கொண்டார்.  தமிழில் கவர்ச்சி கம்மி என்றாலும் தெலுங்கில் தாராளமாக புகுந்து விளையாடுகிறார். பாலிவுட்டில் அறிமுகமான இவர் மனம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் […]

You May Like

%d bloggers like this: