ட்விட்டரில் கலக்கும் ஹீரோ “மாஸ்டர் மகேந்திரன்”..!

குழந்தை நட்சத்திரமாக மின்னிய மகேந்திரன் ஹீரோவாக நல்ல கதையை தேடி வருகிறார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தைப் பதிவேற்றி, பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார். நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நமக்கெல்லாம் அறிமுகமாகியவர் மாஸ்டர் மஹேந்திரன். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகுமிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக மின்னினார் மகேந்திரன். அவருக்கு அடுத்து அடுத்து படங்கள் குவிந்தன. ‘தாய்குலமே தாய்குலமே’ படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார்.

அதன் பின் நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அந்த குழந்தை கதாபாத்திரத்தில் இவரே நடித்தார் . தொடர்ந்து தமிழ் ,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். அதன் பின் 1998ல் வெளிவந்த கும்பகோணம் கோபாலு படத்தில் மீண்டும் இவருக்கு குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது கிடைத்தது. ரஜினியுடன் படையப்பா படத்திலும் நடித்திருப்பார். 2001ல் தெலுங்கில் வெளிவந்த லிட்டில் ஹார்ட்ஸ் திரைப்படத்திலும் மூன்றாவது தேசிய விருதை பெற்றார் மகேந்திரன். அதுவரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மகேந்திரன் “முதல் காதல் மழை” படம் மூலம் ஹீரோவானார். இதையடுத்து ஜக்குபாய் படத்தில் சரத்குமாருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், “விழா” என்ற படத்திலும் நடித்து இருந்தார். ஆனால் எதுவும் பெயர் சொல்லும் படமாக அமையாததால் நல்ல கதைக்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறார். எப்படியும் நல்ல வாய்ப்பு வரும் என்று அதற்காக தனது உடலை தயார்படுத்தி வருகிறார். தீவிர உடற்பயிற்சி செய்து அந்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக 3 தேசிய விருது, 1நந்தி விருது மற்றும் பல படங்களில் அசத்தியா மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவை ஒரு ரவுண்ட் அடித்தது போல் ஹீரோவாகவும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியல்..!

Fri Dec 20 , 2019
வருடம் தோறும் இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களின்  பட்டியல்  போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடுவது  வழக்கம். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.வருடம் தோறும், பிரபல ஆங்கில இதழ் போர்ப்ஸ் இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதில்,இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டுவோரின் டாப்  பட்டியலில் ரூ. 252 கோடி வருமானம் ஈட்டி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். தற்போது ஓய்வில்  உள்ள கிரிக்கெட் வீரர் தோனி ரூ. […]
%d bloggers like this: