சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 168” படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ’மன்னவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தகவல்கள் கசிந்த ஒரு சில நிமிடங்களில் ரஜினி ரசிகர்கள் ’மன்னவன்’ என்ற டைட்டிலில் தாங்களாகவே ஒரு போஸ்டரை டிசைன் செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றன.

இந்த படத்திற்கு உண்மையிலேயே ’மன்னவன்’ டைட்டில் தானா என்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னரே ரஜினி ரசிகர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்..!!

Thu Jan 23 , 2020
4-வது குஞ்சலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் நடிகர் அர்ஜுன் போர்வீரனாக நடிக்கிறார். 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக […]

Actress HD Images

%d bloggers like this: