“யுவன் சங்கர் ராஜா” அறிமுகப்படுத்தும் புதிய இசை ஆல்பம்..! “மறுபிறந்தாள்”..!

மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ) யுவன் சங்கர் ராஜா அறிமுகப்படுத்தும் இசை ஆல்பம் ! சர்வதேச தைய் திரைப்பட விழாவில் சிறந்த வீடியோ பாடல் என்ற விருதை இப்பாடல் பெற்றுள்ளது.யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்டு நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்னின் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ).

திருநங்கை தாய்க்கும் அவரது வளர்ப்பு மகளுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஆணாதிக்கம் மாறாத இவ்வுலக சமுதாயத்தில் அனைத்து குற்றங்களுக்கும் குற்றவாளியாக பெண்ணையே கை காட்டுகிறது. பெண்ணின் ஒழுக்கம் காக்க சொல்லும் சமுதாயம் அவளை அடக்குவதிலேயே தான் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மாற வேண்டியது சமுதாயமே. பெண்ணிற்கான உரிமையை அளிக்கும் சமூகமாக, நாம் அனைவரும் இணைந்தே இந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனும் கருத்தை இந்த பாடல் சொல்கிறது.

யெல்தோ ஜான் இசையில் ருக்‌ஷீனா முஸ்தபா வரிகளில் அம்மா, மகள் கூட்டணியான டாக்டர் ஷஹானி ஹஃபீஸ்,ரெஹயா ஃபாத்திமா பாடியுள்ள வீடியோ பாடலே “மறுபிறந்தாள்”. டாக்டர் ஷஹானி ஹஃபீஸ் இந்த இசை ஆல்பத்தின் திரைவடிவத்தின் கருவை உருவாக்கி, தயாரித்துள்ளார். மேலும் ஆதர்ஷ் கிருஷ்ணாவுடன் இணைந்து இந்த இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார் டாக்டர் ஷஹானி ஹஃபீஸ். மேடை நாடக கலைஞர், திருநங்கை ரெஞ்சு ரெஞ்சிமார், ரோஸ் ஷெரீன் அன்சாரியுடன் இணைந்து இந்த ஆல்பத்தில் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் பாடலுக்கு அபி ரெஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ரேம்சாய் முகுந்தன் அற்புதமாக படத்தொகுப்பு செய்துள்ளார்.இந்த ஆல்பம் பாடலை உருவாக்கிய டாக்டர் ஷஹானி ஹஃபீஸ் ஒரு ஆயூர்வேத நிபுணர். கேரளாவில் இயங்கி வ்ரும் ஆயூர்வேத மருந்துகள் தயாரிக்கும் ஆயூர் வேத நேச்சுரல்ஸ் நிறுவனத்தை நிறுவியவர். கவிதைகள், இலக்கியம், இசை மீது அதீத ஆர்வம் இவருக்கு இருக்கிறது. தற்போது சமூக நல நோக்குடன் கூடிய கருத்தை மையமாக கொண்டு ஒரு குறும்படம் இயக்கி வருகிறார்.

பாக்காக்கில் நடைபெற்ற சர்வதேச தைய் திறப்பட விழாவில் சிறந்த வீடியோ பாடல் என்ற விருதை பெற்றது. மேலும் கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா மற்றும் புனேவில் நடைபெற்ற புத்த சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் இந்த ஆல்பம் பங்கேற்றது. கேரளாவில் சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா மற்றும் ராஜஸ்தான் மற்றும் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா ஆகிய இந்திய திரைவிழாக்களுக்கும் இந்த வீடியோ பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மியூசிகல் வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபிறந்தாள் ( அவளது மறுபிறப்பு ) உலகம் முழுதும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Advertisements

fogpriya

Next Post

என்னை பெரிய ஆளாக்க வேணாம்.. உங்க வேலைய பாருங்க போதும்.. அமைச்சரிடம் எகிறிய நடிகர் "சித்தார்த்"

Sun Dec 15 , 2019
சென்னை: என்னை பெரிய ஆளாக்க வேண்டாம், உங்களின் வேலையை பார்த்தாலே போதும் என நடிகர் சித்தார்த் அமைச்சரை சாடியிருக்கிறார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்ததற்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இந்த விவகாரத்தில் அவர் கடுமையாக சாடி டிவிட்டியிருந்தார்.ஜெயலலிதா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒருபோதும் ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லாமல் அதிமுக நெறி தவறி சீரழிந்திருக்கிறது என்றும் டிவிட்டியிருந்தார் […]
%d bloggers like this: