“மாஸ்டர்” படம் நாயகி மாளவிகா-வுக்கு குவியும் பட வாய்ப்புகள்…

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு சில தமிழ் திரைப்படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது. குறிப்பாக சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள “அருவா” படத்தில் மாளவிகா மோகனன் தான் நாயகி என்று கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிக்க மாளவிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் என்ற படத்தை ஹிந்தியில் வினியோகம் செய்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பாலிவுட் படத்தை தயாரிக்க உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் நடிக்க நடிகை மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் மாளவிகா டூப் இன்றி ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததை கேள்விப்பட்டு இந்த படத்தில் நடிக்க அணுகியதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகவிற்கு அந்த படம் வெளியாவதற்குள் மூன்று பெரிய படங்களில் நடிக்கவாய்ப்புகள் வந்துள்ளது கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.


Advertisements

Next Post

நான் பீர் அடிப்பேன்... அது என்னுடைய இஷ்டம்... அதிர வைத்த மலையாள நடிகை..!!

Wed Mar 4 , 2020
தனக்கு பீர் அடிக்கப் பிடிக்கும் என்றும், அது தன்னுடைய இஷ்டம் என்றும் மலையாள நடிகை வீணா நந்தகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்து பலரையும் அதிர வைத்துள்ளார்.ஆசிப் அலி ஹீரோவாக நடித்த கெட்டியோளானு என்டே மாலாகா படத்தில் ரின்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வீணா நந்தகுமார். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பீர் குடிக்கும் பழக்கம் உள்ளது என்று தெரிவித்து அதிர வைத்துள்ளார். மது அருந்தும் பழக்கமே […]
%d bloggers like this: