மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக்..!!மாஸ்டர் காட்சி தானா..!!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி என்ற வீடியோ க்ளிப் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் மணல் அள்ளும் சவுடை வைத்து எதிரிகளை பயங்கரமாக தாக்குவது போன்று இருக்கும் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி கெத்தாக நடந்து வரும் வீடியோ ஒன்று லீக்காகி படக்குழு மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை மிகவும் அப்செட் செய்தது. இந்நிலையில், தற்போது அடுத்ததாக ஒரு சண்டை காட்சி வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளதாக ஒரு வீடியோ காட்சி பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், அது மாஸ்டர் படத்தின் காட்சியா? என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது. ஏனென்றால், அந்த மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்பில் விஜய்யின் முகம் சரிவர தெரியவில்லை. இது மாஸ்டர் படத்தின் காட்சி என்று சிலர் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இது மாஸ்டர் படத்தின் காட்சி அல்ல என்று சில ரசிகர்கள் மறுத்து வருகின்றனர்.

Advertisements

Next Post

'வானம் கொட்டட்டும்' படத்தின் "Easy Come Easy Go" வீடியோ பாடல் இதோ..!!

Thu Jan 30 , 2020
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான்,  பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மணிரத்னம்  மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா […]
%d bloggers like this: