“ஒரு குட்டி கத” மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!! விரைவில்…

கையில் ஜாக் டேனியல்ஸ் ஹிப் பிளாஸ்க். அந்த பிளாஸ்க்கை நடுஇவ்விரல் மடக்காமல் புடிக்கும் தோரணை. இந்த உலகத்தின் ஒலியை மறப்பதற்கு ஹெட் போன்ஸ். பலத் தேவையற்ற ஓளிகளை குறைப்பதற்கு கூலிங்க் கிளாஸ். கட்டம் போட்ட சட்டை, காக்கி கலர் பாண்ட், முகம் முழுக்க தாடி, ஒரு நாற்காலியில் தெனாவட்டாக உட்கார்ந்திருக்கும் விஜய். இப்படிப்பட்ட விஜயை இதற்கு முன் அவருடைய ரசிகர்கள் கண்டதில்லை. அதனால் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த மாஸ்டர் படம் தளபதி விஜயின் சினிமா வாழ்வில் மிகவும் முக்கியமான திரைப்படம். இந்த போஸ்டரில் விஜய் அணிந்திருக்கும் சட்டை நேற்று அவர் தன் ரசிகர்களுடன் இணைந்து Selfie எடுக்கும் போது அணிந்திருந்த சட்டை.

இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு ஆசிரியராக நடித்திருக்கிறார் என்ற செய்தி பரவியது. இந்த தோரணையில் அவர் ஆசிரியரென்று யாரும் நம்பமாட்டார்கள். அவருடைய கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாகவே வைத்துள்ளனர். அவர் உட்கார்ந்திருக்கும் நாற்காலி அவர் ஆசைப்படுவதோ இல்லை அவரைத் தேடிவரும் என்று அவர் நினைக்கும் அரசியல் அரியாசனத்தை சுட்டிக்காண்பிக்கிறது. அவரின் மடங்காத நடுவிரல் தற்போது அவருக்கு நிகழ்ந்த வருமான வரிப்பரிசோதனையின் முடிவை யாருக்கோ கிண்டலடித்து கூறுவதுபோல் அமைந்துள்ளது. மேலும் ஒரு மது அருந்தும் பழக்கமுடையவரென்றால் நிச்சயமாக ஒரு இழப்பு நிறைந்த பிலாஷ்பாக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Next Post

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை.... குடும்பத்தினர், ரசிசர்கள் அதிர்ச்சி..!!

Wed Feb 12 , 2020
மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ்,(Subarna Jash,) தற்கொலை செய்துகொண்டார். பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்துவந்த சுபர்ணா ஜாஸ், அண்மைக்காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின் விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.  இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் பெங்காலி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Advertisements
%d bloggers like this: