‘விஜய்’ பாடியுள்ள Always Be Happy: “ஒரு குட்டி கத” பாடல் இதோ..!!

தளபதி விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என படக் குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்தது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

கல்லூரி பேராசிரியாக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவரது மாணவராக சாந்தனு நடித்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ என்ற முதல் சிங்கிள் டிராக் சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ள இப்பாடலை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த பாடல்…

Advertisements

Next Post

தொலைக்காட்சி தொகுப்பாளினி கழுத்தை நெரித்துக் கொலை..!!பஞ்சாபில் கொடூர சம்பவம்...

Sat Feb 15 , 2020
பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா சிங் என்ற இளம் பெண்ணை அவர் கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் இருந்த அனிதாவின் உடலை நைனிடால் பகுதியில் இருந்து போலீசார் மீட்டனர். 29 வயதான அனிதா இன்னொருவனுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக அவர் கணவர் ரவீந்தர் பால் சிங் சந்தேகித்தார். இதனால் கடந்த மாதம் 30ம் தேதி மனைவியை நைனிடாலில் […]

Actress HD Images

%d bloggers like this: