மாஸ்டர் செகண்ட் லுக் குறித்த அறிவிப்பு..

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் தற்போது முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருவதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் தற்போது இன்று மாலை 5 மணிக்கு ‘மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் இதுகுறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இன்று விஜய்சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவர இருக்கிறது என்பதால் ஒரே நாளில் விஜய் சேதுபதியின் இரண்டு படங்களின் போஸ்டர்கள் வெளிவரவுள்ளது என்பதும், நாளை மறுநாள் பிறந்த நாளை கொண்டாட இருக்கும் விஜய் சேதுபதிக்கு இதைவிட சிறந்த பிறந்த நாள் பரிசு வேறு இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பிக்பாஸ் புகழ் பாடகி ரம்யாவு-க்கு குழந்தை பிறந்தது...!

Wed Jan 15 , 2020
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மூலம் பிரபலமானவர் பாடகி என்.எஸ்.கே ரம்யா. எல்லோரிடனும் அன்பு கொண்டு வந்த அவர் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சண்டை சச்சரவுகளில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். ஆனால் அவரை ஒரு பாடகியாக பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். கோடான கோடி பாடல் இன்னும் யாராலும் மறக்க முடியாதது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தன் காதலரான நடிகர் சத்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த […]
Advertisements