புதிய படத்திற்கு ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா..?

தர்பாரைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதில் நடிக்கவுள்ள பிற நடிகர்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்து, வீரா, எஜமான் உள்ளிட்ட படங்களில் இருவரும் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisements

fogpriya

Next Post

சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்..!

Fri Dec 6 , 2019
சென்னை குரோம்பேட்டையில் தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை நடுரோட்டில் இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயம் அடைந்த மாணவி சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் பொன். பாக்கியராஜ்.இவருக்கு 19 வயதாகிறது. இவர் ஒரு கல்லூரி மாணவி ஒருவரை 4 வருடங்களாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் இவரிடம் […]

Actress HD Images

Advertisements