மீரா மிதுனை கழிவி ஊற்றிய நடிகர்..!

சமூக வலைத்தளங்களால்  பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் படமாக    “கருத்துக்களை பதிவு செய் ” படம் உருவாகி வருகிறது. ராகுல்பரமகம்சா இயக்கும் இப்படத்தை RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.  எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் பாக்கியராஜ் கலந்துகொண்டு பேசியிருந்தார். அப்போது அந்த மேடையில் மீரா மிதுன் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து பிரபல நடிகர் அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, பாக்யராஜ் சார் இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா சார் கூட ஏதோ ஒரு விசயம் பேசிட்டுக்காரு. ரெண்டு பேருக்கு நடுவில் உட்காந்திருந்த இந்தம்மா மீரா மிதுன்க்கு காலை கீழ போடத்தெரியாதா? மேடை ஏறுனதுல இருந்து கால்மேல காலை போட்டு உட்கார்ந்து இருக்குறது மீரா மிதுன் அவங்க மேனரிசமா இருக்கலாம். திரு. #பாக்யராஜ் சார் இந்தியாவின் தலை சிறந்த கதையாசிரியர்..நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பத்திரிகைஆசிரியர்… அதெல்லாம் விடுங்க… அவரு வயசு என்ன… அவரு தகுதி என்ன…இந்தம்மா மீராமிதுன்லாம அவரு வயது அனுபவத்துக்கு முன் …..தூசிக்கு சமம்… என்னா ஒரு அகம்பாவத்துல கால் மேல கால் போட்டு உட்காந்திருக்காங்க…என கடுமையாக விமர்சித்துள்ளார். 

Advertisements

fogpriya

Next Post

லெஜண்ட் சரவணன் நடிக்கும் "புரொடக்‌ஷன் நம்பர் 1" படத்திற்கான படப்பணிகள் தொடக்கம்..!

Mon Dec 2 , 2019
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகளை திரை பிரபலங்கள் தொடங்கி வைத்தனர். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணா தற்போது புதிய படம் ஒன்றை தானே தயாரித்து நடித்தும் வருகிறார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை தயார் செய்த ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இந்த படத்தை இயக்குகின்றனர். லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னனி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. […]

You May Like

%d bloggers like this: