மெர்சலில் விஜய்-க்கு மேஜிக் கற்றுத் தந்தவருக்கு சம்பள பாக்கி…!

மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மேஜிக் சொல்லிக் கொடுத்த மேஜிக் நிபுணருக்கு 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி:

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்திற்காக விஜய்க்கு மேஜிக் சொல்லி தந்ததற்காக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 4 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளதாக, கனடாவை சேர்ந்த மேஜிக் நிபுணர் ராமன் ஷர்மா தற்போது தெரிவித்துள்ளார். 

வீடியோ வெளியீடு: 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பலமுறை தயாரிப்பு நிறுவனத்திடம் பணத்தை கேட்டும், தயாரிப்பு நிறுவனம் உரிய பதிலளிக்கவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னை வந்த போது நடிகர் விஜய் மற்றும் அட்லீயை சந்தித்ததாக தெரிவித்துள்ள அவர், சம்பள பாக்கி குறித்து அவர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

Advertisements

Next Post

பள்ளி காதல் படம் எடுக்காதீர் ..! 96 திரிசா அட்வைஸ்

Tue Sep 3 , 2019
திரைப்படங்களில் பள்ளி மாணவர்கள் காதலிப்பது போன்று இடம் பெறும் காட்சிகள் மாணவ – மாணவிகளின் மனதை கெடுப்பதாக மாணவி ஒருவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில் சினிமா இயக்குனர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்று  96 படத்தில் நடித்த நடிகை திரிஷா அறிவுறுத்தி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிப் பருவ காதலையும் கல்லூரி கால காதலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட 96 என்ற படத்தில் நடித்ததால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை […]
%d bloggers like this: