எம்.ஜி.ஆர் & ஜெயலலிதா நடிப்பில் பொன்னியின் செல்வன்..

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அனிமேஷன்களை உருவாக்கி பொன்னியின்செல்வன்பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது. கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் 40 வருடங்களுக்கு முன்னதாக முயற்சி செய்தார். அதற்காக இயக்குனர் மகேந்திரன் திரைக்கதை அமைத்துக் கொடுத்தார்.

அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி கைகூடவில்லை. இதனையடுத்து இப்போது மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தோற்றத்தை அனிமேஷனில் வரைந்து வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1 என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் பாடல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. பெரியார் குத்து’ பாடல் புகழ் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisements

Next Post

ஐடி ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா...சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!!

Sun Jan 19 , 2020
முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் கம்ரேட்’, மகேஷ் பாபுவுடன்  ‘சரிலேரு நீக்கெவரு’ படத்திலும் நடித்திருந்த ராஷ்மிகா தமிழில் விஜய்க்கு ஜோடியாக […]
%d bloggers like this: